விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 17,500 அபராதம் விதிப்பட்டது.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (45). கடந்த 2015 ஆம் ஆண்டு விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, கருப்பையாவை குற்றவாளி என உறுதி செய்து, சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ. 10,000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு அளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஜுடு ஏஞ்சலோ ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



