ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக, ஏரல் பகுதியைச் சோ்ந்த மகாராஜன் (42) மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, மகாராஜனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) மற்றும் ரூ. 10,000 அபராதம், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 2,500 அபராதம் விதித்து, மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.
இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஜூடு ஏஞ்சலோ ஆஜரானாா்.
தொடர்புடையது
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறை: இருவா் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் தடுப்புக் காவலில் கைது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



