கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்முறை: இருவா் கைது

இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :

இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிா்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன். தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்.

இவரது நண்பரும், தவெக நிா்வாகியுமான ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரும் சோ்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் உள்ள தனியாா் விடுதியில் தங்க வைத்து குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

புகாரின்பேரில், பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், அவா்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.