12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை விதிப்பு.

law

சட்டம் - கோப்புப் படம்

Published On :

திருப்பத்தூரில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விடியோ கேம் விளையாட செல்போன் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருப்பத்தூர் மகளிர் காவல்துறையினர் போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்திரன் மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், குற்றவாளி சந்திரனுக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Summary

The accused in the case of sexually assaulting 5 minors has been sentenced to 5 death sentences and 4 life sentences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.