புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை: குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் குற்றவாளி பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

House

சம்பவம் நடந்த வீடு - from video

Published On :

தென்கிழக்கு தில்லியின் கைலாஷ் ஹில்ஸ் பகுதியில், இந்திய வருவாய்த்துறை அதிகாரியின் 22 வயது மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற சம்பவத்தில் கைதான குற்றவாளி ராகுல் மீனா பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளி ராகுல் மீனா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தன்னுடைய குற்றங்களுக்காக வருந்தவில்லை என்றும், விசாரணையின்போது வாக்குமூலத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தன்னுடைய பேசும்பாணியை அவ்வப்போது மாற்றிக் கொண்டு நீதிபதி முன் பேசியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

நான் குற்றம் செய்துவிட்டேன், தவறுதான் என்று நீதிபதியிடம் குற்றவாளி ராகுல் கூறியதைத் தொடர்ந்து, அவரை நான்கு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி, குற்றத்தை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேட்டதற்கு, இது என்னுடைய வாக்குமூலமாக நான் கருதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

குற்றம் நடந்த வீட்டில், ராகுல் எட்டு மாதங்கள் வேலை செய்திருக்கிறார், நிதித் தொடர்பாக ஏதோ முறைகேடு செய்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள். இதனால், அந்த வீட்டின் அனைத்து விஷயங்களும் குற்றவாளிக்கு தெரிந்திருக்கிறது, பெற்றோர் வழக்கமாக காலையில் வெளியில் செல்வதும் தெரிந்திருக்கிறது. இதுவே குற்றத்துக்கு அடிப்படையாக மாறிவிட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, ராகுல், ராஜஸ்தானில் மற்றொரு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ராகுல் கொள்ளையடித்த பொருள்களும் அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Summary

Shocking information has been released about the culprit in the murder case of an IRS officer's daughter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.