
தமிழ்நாடு
தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது - DPS
கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
வாக்களித்தார் தவெக தலைவர்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் தவெக தலைவர் விஜய் இன்று வாக்களித்தார்.
வாக்களித்தார் அஜித்
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு 6.45 மணிக்கு சென்ற நடிகர் அஜித்குமார், முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார்
டெல்டாவில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றுவோம்- அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கே வாக்களிக்க வந்த திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வி.வி.பேட் இயந்திரம் பழுதானதால் சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 9 தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும், அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். டெல்டா பகுதியில் பெரும்பான்மையான தொகுதிகளை திமுக வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கு வாக்களிக்க வந்துள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எங்களுக்கு வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
நேரு வாக்களித்தார்
திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான கே என் நேரு அவர்கள் தனது வாக்கை பதிவு செய்தார்

நேரு - dps
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வாக்களித்தார்.
வாக்களித்தார் சீமான்
சென்னை நீலாங்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். வாக்காளிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம். அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார்.
சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.
குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் இபிஎஸ்
எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
வாக்களித்தார் அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்களித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்காளர் விவரம்
மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291
ஆண்கள்-2,80,30,658
பெண்கள் - 2,93,04,905
மூன்றாம் பாலினத்தவா் - 7,728
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தபால் வாக்குகள்
புதன்கிழமை வரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடும் கட்டுப்பாடுகள்
வெளி தொகுதிகளில் வந்து பிரசாரம் செய்தவா்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்தது.
வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நான்குமுனைப் போட்டி
தமிழக பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாதக, தவெக ஆகிய நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தோ்தல் தேதி கடந்த மாா்ச் 15-இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த தீவிர தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
முதல் முறை வாக்காளர்கள்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு






