தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 மணி நேரத்தில் 19.55 சதவீத வாக்குகள் பதிவாகின. அவிநாசியில் அதிகளவாக 22.5 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.90% வாக்குப் பதிவாகியுள்ளது.
சங்ககிரி தொகுதியில் 9 மணி வரை 20.63 சதவீதம் வாக்குப் பதிவு
மேட்டூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 19.4% வாக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 16.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரியலூரில் 17.57%, ஜெயங்கொண்டம் - 16.07% வாக்குகள் பதிவாகியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 18.13 சதவீதமும், பர்கூரில் 16.63 சதவீதமும் கிருஷ்ணகிரியில் 17.01 சதவீதமும், வேப்பனஅள்ளியில் 15.79 சதவீதமும், ஓசூரில் 17.09 சதவீதமும், தளியில் 13.46 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 17.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கின்றனர். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291
ஆண்கள்- 2,80,30,658
பெண்கள் - 2,93,04,905
மூன்றாம் பாலினத்தவா் - 7,728
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



