தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6 மணி முதலே வாக்குச் சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றிருப்பதைக் காண முடிந்தது.
கோடை வெப்பம் வாட்டும் என்பதால், பெரும்பாலான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தமிழகத்தில் 33,133 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,025 இடங்களில் உள்ள 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளா்கள் - 5,73,43,291
ஆண்கள்-2,80,30,658
பெண்கள் - 2,93,04,905
மூன்றாம் பாலினத்தவா் - 7,728
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு காவல்துறை துறை நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? - மு.வீரபாண்டியன்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவராக வி. சிவா! விஜய்க்கு பெரம்பூர் தொகுதியை விட்டுத்தந்தவர்!!

தமிழ்நாடு நாள்! முதல்வர் விஜய் வாழ்த்து

உ.பி. டூ தமிழ்நாடு... முதல்வர் விஜய் தளபதியை சந்திக்க 24 வயது இளைஞர் நடைப்பயணம்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



