தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா பதவியேற்றார்.
இன்று காலை தொடங்கிய தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்.எல்.ஏ.வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பேரவைச் செயலகத்தில் வழங்கியுள்ளார்.
மற்ற கட்சியினருக்கு பெரும்பான்மை இல்லாததால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
Summary
J.C.D. Prabhakaran to become the Speaker of the Tamil Nadu Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








