தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவுகளாக வருகை தந்தனர்.
பேரவைத் தோ்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக் கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் பொதுச் செயலரான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று வருகின்றனர்.
இன்றைய கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.வாக பதவியேற்கும் போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டிய நிலையில். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டினர்.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், எம்.எல்.ஏ.வாக பதவியேற்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
Summary
AIADMK members arrive at the Tamil Nadu Legislative Assembly in two factions!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாடு பாலைவனமாகும்: இபிஎஸ்
அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் தகவல்
அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




