காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

தமிழ்நாட்டில் 6 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 7:32 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு , மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 மணி நிலவரப்படி 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், கடும் வெய்யிலையும் பாராமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றாலும், 6 மணிக்குள் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 84.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்டவாரியாக விவரம்... (சதவிகிதத்தில்)

அரியலூர் - 85.33

செங்கல்பட்டு - 84.26

சென்னை - 83.15

கோயம்புத்தூர் - 84.40

கடலூர் - 84.57

தருமபுரி - 89.87

திண்டுக்கல் - 88.29

ஈரோடு - 89.77

கள்ளக்குறிச்சி - 86.89

காஞ்சிபுரம் - 86.81

கன்னியாகுமரி - 75.46

கரூர் - 91.92

கிருஷ்ணகிரி - 84.65

மதுரை - 80.20

மயிலாடுதுறை - 81.01

நாகப்பட்டினம் - 85.35

நாமக்கல் - 89.46

பெரம்பலூர் - 85.17

புதுக்கோட்டை - 83.37

ராமநாதபுரம் - 76.18

ராணிப்பேட்டை - 88.58

சேலம் - 90.19

சிவகங்கை - 76.07

தென்காசி - 81.48

தஞ்சாவூர் - 80.07

நீலகிரி - 78.43

தேனி - 80.85

தூத்துக்குடி - 79.75

திருச்சிராப்பள்ளி - 85.04

திருநெல்வேலி - 77.44

திருப்பத்தூர் - 87.67

திருப்பூர் - 88.22

திருவள்ளூர் - 82.89

திருவண்ணாமலை - 88.06

திருவாரூர் - 82.86

வேலூர் - 87.74

விழுப்புரம் - 87.67

விருதுநகர் - 84.15

கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவிகிதமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 75.46 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Summary

Voter turnout percentage recorded in Tamil Nadu as of 6 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.