எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

News image

தமிழகத்தில் வாக்குப்பதிவு - x/ TNelectionsCEO

Updated On :23 ஏப்ரல் 2026, 1:42 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம், 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 50.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளைவிட இம்முறை 17% அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 1 மணிவரை 39.61 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இம்முறை 17.2 சதவிகிதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.

பகல் 1 மணி வரை 3.25 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.

மாவட்டவாரியாக விவரம்... (சதவீதத்தில்)

அரியலூர் - 55.18

செங்கல்பட்டு - 56.28

சென்னை - 54.58

கோயம்புத்தூர் - 58.24

கடலூர் - 55.13

தருமபுரி - 59.02

திண்டுக்கல் - 59.79

ஈரோடு - 61.79

கள்ளக்குறிச்சி - 57.15

காஞ்சிபுரம் - 58.98

கன்னியாகுமரி - 50.35

கரூர் - 60.77

கிருஷ்ணகிரி - 56.21

மதுரை - 54.75

மயிலாடுதுறை - 53.59

நாகப்பட்டினம் - 57.07

நாமக்கல் - 62.51

நீலகிரி - 50.42

பெரம்பலூர் - 57.55

புதுக்கோட்டை - 56.78

ராமநாதபுரம் - 51.54

ராணிப்பேட்டை - 58.62

சேலம் - 61.42

சிவகங்கை - 53.50

தென்காசி - 54.24

தஞ்சாவூர் - 54.83

தேனி - 55.63

தூத்துக்குடி - 52.55

திருச்சிராப்பள்ளி - 57.66

திருநெல்வேலி - 50.73

திருப்பத்தூர் - 57.42

திருப்பூர் - 62.97

திருவள்ளூர் - 55.45

திருவண்ணாமலை - 58.23

திருவாரூர் - 56.00

வேலூர் - 57.49

விழுப்புரம் - 58.23

விருதுநகர் - 57.27

Summary

56.81 percent voter turnout in tamilnadu till 1 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.