சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலையே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி, சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்காளர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என்றும் 100% உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
Summary
EPS Casts His Vote in Edappadi, Accompanied by His Family
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











