முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளது பற்றி...

News image

இபிஎஸ் - ENS

Updated On :9 மே 2026, 1:41 pm IST

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவைக் கோரியது. அதன்படி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மேலும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் விசிகவின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரை விஜய் இதுவரை மூன்று முறை சந்தித்துள்ளார்.

அதிமுகவும் திமுகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆட்சியமைக்கும் அரசுக்கு வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Summary

Congratulations to the party forming government in tamilnadu: EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.