ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 நிர்வாகிகளை திமுக நியமித்த நிலையில், ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்குச் சாவடியில் வெறும் 5 வாக்குகள் பதிவானதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 2,87,027 வாக்காளர்கள் உள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 2,55,293 பேர் வாக்களித்துள்ளனர். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் 1,03,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், திமுகவின் துரைராஜ் 69,645 வாக்குகளும், அதிமுகவின் மனோகரன் 65,819 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91 ஆவது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை நியமித்ததாக திமுக கூறும்நிலையில், 91 ஆவது வாக்குச்சாவடியில் அக்கட்சிக்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, அவர்களின் கட்சியினரே அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று பொருளாகிறது.
இதுகுறித்து, திமுக நிர்வாகிகள் கூறியதாவது, கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களே வாக்களிக்கவில்லையா அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
Summary
TN Polls 2026: DMK secures only 5 votes at a polling station in Srirangam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!

ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக அமோக வெற்றி

கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

