தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுக

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம் என டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தது குறித்து...

News image

டி.கே.எஸ். இளங்கோவன் - படம் - ஏஎன்ஐ

Updated On :1 மணி நேரம் முன்பு

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார்.

அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (மே 7) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேலும், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் கட்டாயம் என்பதை ஆளுநர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தவெக முதலில் 107 இடங்களுடன் ஆளுநரை அணுகியிருந்தால், ​​ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். ஆனால், தவெக தங்களோடு வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக்கொண்டதால் இடங்களின் எண்ணிக்கை 112 ஆகிறது. ​​அதனால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்வார்.

தவெக மட்டும் சென்றிருந்தால், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்து, பின்னர் சட்டபேரவையில் தங்கள் பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். இப்போது தவெகவுக்கு சில கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பதால், அரசாங்கம் தனிப்பெரும்பான்மைக்காகக் காத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

Summary

DMK spokesperson T.K.S. Elangovan has stated that the TVK could have formed the government had it approached the Governor independently.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.