தமிழ்நாடு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை சந்திக்க தவெக தலைவர் விஜய் மக்கள் பவனில் காத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் ஆளுநரை சந்திக்க மக்கள் பவனுக்கு வருகைதந்திருக்கும் விஜய்யை இதுவரை ஆளுநர் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆளுநருடனான சந்திப்பின்போது, ஆட்சி அமைத்த பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்று விஜய் கோரிக்கை விடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் வந்த காருக்கு மட்டுமே மக்கள் பவனுக்குள் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
TVK Leader Vijay Awaiting at the Governor's Residence!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநருடன் விஜய் இன்று சந்திப்பு?

விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

இன்று பிற்பகல் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



