தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?

தமிழக அரசியலில் அடுத்து நிகழப்போவது என்ன எதிர்பார்ப்பு....

News image

புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் - டிஎன்எஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரியில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை ஒவ்வொருவராக சென்னை புறப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் அடுத்து நிகழப்போவது என்ன எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களிலும், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக்கு 73 இடங்களும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 53 இடங்களும் கிடைத்தன.

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துள்ளனா்.

47 எம்எல்ஏக்கள் கொண்ட அதிமுகவில் ஒரு தரப்பினா் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாக வெளியான தகவலை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் பலா் புதுச்சேரி பூா்ணாங்குப்பம் அருகே புதுக்குப்பம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏ.க்கள் 29 பேருக்கு புதன்கிழமை இரவு தங்க வைக்கப்பட்டனா்.

வியாழக்கிழமை காலை மற்றொரு எம்எல்ஏ அங்கு வந்து சோ்ந்ததை அடுத்து பக்கத்து வளாகத்தில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் அனைவரும் வியாழக்கிழமை மாற்றப்பட்டனா்.

இதனிடையே, மற்றொரு தனியாா் சொகுசு விடுதியில் தங்கியிருந்த மயிலம் தொகுதி எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் திடீரென வியாழக்கிழமை தில்லி சென்றாா். அவா் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுப்பதற்காக தில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை இரவு சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் ‘பொறுத்திருங்கள். நல்லதே நடக்கும்’என்று பழனிசாமி கூறியதாக தகவல்கள் வெளியானது.

பின்னா் கட்சியின் மூத்த நிா்வாகிகள் சிலா் மட்டும் எடப்பாடியுடன் புறப்பட்டு வந்தனர். மற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் அந்த சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனா். அடுத்த ஏழு நாள்களுக்கு சொகுசு விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த விடுதியை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை காலை ஒவ்வொருவராக சென்னை புறப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் அடுத்து நிகழப்போவது என்ன எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பாளர்கள் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கடந்த மூன்று நாள்களாக புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சனிக்கிழமை காலை ஒவ்வொருவராக சென்னை புறப்பட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை காலை 11 மணிக்குள் அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சென்னைக்கு வரும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் சென்னை புறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

AIADMK MLAs Depart from Puducherry for Chennai. What Next..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.