தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி!

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

News image

கிளாம்பாக்கம் - File photo

Updated On :23 ஏப்ரல் 2026, 9:08 am IST

சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று சொந்த ஊர் சென்று வாக்கு செலுத்த நேற்று இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

திருச்சி, மதுரைக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லை எனவும் அதிகாலை முதல் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாகவும், சொந்த ஊர் செல்லாமல், சென்னை திரும்பும்நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Summary

People were suffering due to the lack of buses in Kalampakkam, near Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.