பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி!

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி பற்றிய தகவல்.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:47 pm IST

பெங்களூரில் காதலை அழகாகச் சொல்லப் போகிறேன் என்று கூறி, காதலனை வீட்டுக்கு வர வைத்து ஏமாற்றி, கட்டி வைத்து எரித்துக் கொலை செய்த காதலியைப் பற்றிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெளிநாடுகளில் தற்போது காதலர்களை கட்டிப்போட்டுவிட்டு காதலை சொல்லும் புதிய பாணி பரவலாகி வருகிறது.

அதுபோல, காதலைச் சொல்லப்போவதாக, காதலன் கிரணை வீட்டுக்கு அழைத்து வந்த பிரேரனா (27) தனது காதலன், ஏமாற்றிவிடுவார் என்றும், திருமணம் செய்ய மாட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எரித்துக் கொலை செய்தார்.

இந்த சம்பவத்தில், காதலன் தன்னை நிராகரிப்பதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கொலை செய்ததும், அவரை எரித்துக் கொன்றுவிட்டு, அங்கே செல்போன் மூலம் அதனைப் படம்பிடித்து அவர் துடிதுடித்து பலியாவதை பார்த்துள்ளார்.

தாய் மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்த பிரேரனா, வீட்டில் ஆள் இல்லாத போது கிரணை வரவழைத்துள்ளார். அப்போது, ஒரு நாற்காலியில் அமர வைத்து அவரது கை, கால்களை கட்டி, கண்களையும் மூடியிருக்கிறார். இது அனைத்தையும் அவர் விடியோவிலும் படம்பிடித்திருக்கிறார்.

வெளிநாடுகளில் இப்போதெல்லாம் காதலர்கள் இப்படித்தான் காதலைச் சொல்கிறார்கள் என்று கிரணை சமாதானம் செய்து இதற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். விரைவில் அவர் கையில் பூவுடன் கண்களைத் திறந்துவிடுவார் என்று நினைத்தால், கிரண் மீது மண்ணெண்னை ஊற்றப்பட்டுள்ளது. அவர் என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் தீ வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சம்பவம் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர், பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Summary

Girlfriend tied up her boyfriend and set him on fire, saying she would tell him about her love beautifully!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.