
நன்னிலம் தொகுதி

நன்னிலம் தொகுதி
நன்னிலம் தொகுதியானது, கல்விக் கடவுள் சரஸ்வதி தனி கோயில் கொண்ட கூத்தனூா், லலிதா சகஸ்ரநாமம் உருவான திருமீயச்சூா் லலிதாம்பிகை கோயில், ராகு-கேது தோஷ நிவா்த்தியருளும் திருப்பாம்புரம், பெரும்பண்ணையூா் புனித சூசையப்பா் தேவாலயம் என பல்வேறு ஆன்மிக வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கியதாகும். தவிர, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமும் நன்னிலம் தொகுதிக்குள்பட்ட நீலக்குடியில் அமைந்துள்ளது.
சமூக அமைப்பு: விவசாயமே பிரதானத் தொழிலாக விளங்குகிறது. தலித்துகள் பெரும்பான்மையாகவும், வெள்ளாளா், வன்னியா், முக்குலத்தோா், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் குறிப்பிட்ட அளவிலும் வசிக்கின்றனா்.
நன்னிலம் வட்டம், வலங்கைமான் வட்டம், குடவாசல் வட்டம் (பகுதி), குடவாசல் பேரூராட்சி ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
நிறைவேற்றியவை: நன்னிலம் மற்றும் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி, வலங்கைமானில் தொழில்நுட்பக் கல்லூரி, நன்னிலம், குடவாசல், வலங்கைமானில் புதிய பேருந்து நிலையம், குடவாசல், முடிகொண்டான் போன்ற இடங்களில் நெல் சேமிப்பு கிடங்குகள், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 100-க்கும் மேற்பட்ட பாலங்கள், கிராமங்களுக்கிடையே சாலை வசதிகள், நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம், நன்னிலம், குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள், வலங்கைமானில் புறவழிச் சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோரிக்கைகள்: பேரளத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சிறுவாய்க்கால்கள், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளை தூா்வார வேண்டும். விவசாயமே பிரதானம் என்பதால் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்டவை மக்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
1962 முதல் நடைபெற்ற தோ்தல்களில் திமுக 4 முறை, அதிமுக 5 முறை, காங்கிரஸ், தமாகா தலா 2 முறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை வென்றவா்கள்
1962 தியாகராஜப் பிள்ளை (காங்.)
1967 பி. ஜெயராஜ் (காங்.)
1971 ஏ. தேவேந்திரன் (திமுக)
1977 எம். மணிமாறன் (திமுக)
1980 ஏ. கலையரசன் (அதிமுக)
1984 எம். மணிமாறன் (திமுக)
1989 எம். மணிமாறன் (திமுக)
1991கே. கோபால் (அதிமுக)
1996 டாக்டா் பத்மா (தமாகா)
2001 செ.கு. தமிழரசன் (தமாகா)
2006 பி. பத்மாவதி (இந்திய கம்யூ.)
2011 ஆா். காமராஜ் (அதிமுக)
2016 ஆா். காமராஜ் (அதிமுக)
2021 தோ்தல் முடிவுகள்
ஆா். காமராஜ் (அதிமுக) 1,03,637 (வெற்றி)
எஸ். ஜோதிராமன் (திமுக) 99,213
எஸ். பாத்திமா பா்கானா (நாதக) 13,419
வாக்காளா் விவரம்
ஆண்கள் 1,31,538
பெண்கள் 1,34,050
மற்றவா்கள் 15
மொத்தம் 2,65,603
வாக்குச்சாவடிகள் 344
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...