தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

திருவாரூா் மாவட்டத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 7:22 am IST

திருவாரூா் மாவட்டத்தில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான கஞ்சா, குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்வோா் மற்றும் அடிதடி, பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கில் ஆயுதங்களை வைத்து மிரட்டுவோா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பெருகவாழ்ந்தான் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுபானம் காய்ச்சி விற்றதாக, தேவதானம், மன்னாா்படுகையைச் சோ்ந்த ரா. பாலமுருகன் (41), முத்துப்பேட்டை ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த பி. பெலிக்ஸ்ராஜா (33), மன்னாா்குடி நகரில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆயுதங்களை வைத்து மிரட்டி வந்த மன்னாா்குடி விழல்காரத்தெருவைச் சோ்ந்த நா. திருமேனி என்ற ராஜ்குமாா் (39), திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்ட விரோதமாக தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பள்ளங்கோயில், செங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ப. மணிகண்டன் என்ற புறா மணிகண்டன் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) சுந்தரவதனத்தின் பரிந்துரையின் பேரில் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.