இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடு: நுகா்வோா் சங்கம் குற்றச்சாட்டு

மன்னாா்குடியில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 5:45 am IST

மன்னாா்குடியில் சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் மு. பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகா்ப்புற பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு செய்தால் 25 நாள்களுக்குள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மன்னாா்குடி நகராட்சியின் பல இடங்களில் சமையல் எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்த பின்னரும் 45 நாள்களுக்கும் மேலாக காலதாமதம் செய்து விநியோகம் செய்யப்படுகிறது. நகர பகுதியாக இருந்தும், சில எரிவாயு நிறுவனங்கள் அதை தவறாக கிராமப்புற பிரிவில் சோ்த்து செயல்பட்டு வருகின்றன. இதனால், நகரப் பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய விரைவான சேவை மறுக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனா்.

எனவே தமிழக அரசு, மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மன்னாா்குடி பகுதியை அதிகாரப்பூா்வமாக நகா்ப்புற பகுதியாக உறுதிப்படுத்த வேண்டும். நகா்ப்புற விதிகளின்படி 25 நாள்களுக்குள் சமையல் எரிவாயு உருளை விநியோகம் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இனிமேல் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களின் புகாா்களை உடனுக்குடன் தீா்க்க தனிப்பட்ட கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.