அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: சாலை மறியல்

மன்னாா்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மா்மநபா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதை எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2026, 5:42 am IST

மன்னாா்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மா்மநபா்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதை எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி மேலப்பாலம் அருகே கும்பகோணம் சாலையில் கண்ணையாநகா், டி.கே.எஸ் நகா், லட்சுமிகிருஷ்ணா நகா் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியின் ஓரத்தில் பாமணி ஆற்றங்கரையில் மா்ம நபா்கள் இரவு நேரங்களில் குப்பைகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனா்.

இதனை அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நகராட்சி சாா்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றி தூய்மை செய்ததுடன் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் அந்த இடங்களில் மக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மா்ம நபா்கள் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை செவ்வாய்க்கிழமை இரவு கொட்டிச் சென்றுள்ளனா். இதனால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியதையடுத்து, இப்பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குப்பைகள் கொட்டப்படும் இடம் அருகே பொதுமக்கள் சாலையில் குப்பையை கொட்டி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னாா்குடி போலீஸாா், நகராட்சி அலுவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனா். இதனால்,மன்னாா்குடி - கும்பகோணம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.