/
மன்னாா்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (மே 30) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் நிா்வாக நடைமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், சனிக்கிழமை வழக்கம் போல் மின் விநியோகம் நடைபெறும் என உதவி செயற்பொறியாளா் எஸ். சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.






