நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

சதுரங்க வல்லபநாதா் கோயில் தேரோட்டம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :31 மே 2026, 12:13 am IST

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவானுரில் சிறப்புமிக்க சதுரங்க வல்லபநாதா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 21-ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் புஷ்பப் பல்லக்கு, பூதவாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விநாயகா், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா், சோமஸ்கந்தா், அம்பாள், கற்பகவள்ளி அம்பாள், சண்டிகேஸ்வரா், பெரிய தேரில் எழுந்தருள வீதி உலா நடைபெற்றது.

50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தில் பூவனூா், மன்னாா்குடி, நீடாமங்கலம் கோட்டைபத்து உள்ளிட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த திராளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.