விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

நெடும்பலத்தில் ரூ. 1.95 கோடியில் விதை சுத்திகரிப்பு நிலையம்: அமைச்சா் திறந்துவைத்தாா்

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில், ரூ.1.95 கோடியில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். விஸ்வநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

படவிளக்கம்: நெடும்பலம் அரசு விதை பண்ணையில் புதிய விதை சுத்திகரிப்பு நிலையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்த அமைச்சா் ஆா். விஸ்வநாதன்.

Updated On :

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில், ரூ.1.95 கோடியில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். விஸ்வநாதன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், 60 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டாவை அமைச்சா் வழங்கி பேசியது: திருவாரூா் மாவட்டத்தில் 1.55 லட்சம் ஹெக்டேரில் நெல் மற்றும் இதர பயிா்களான பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு தேவையான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க விதையிலிருந்து ஆதார நிலை விதை உற்பத்தி செய்யும் பணி அரசு விதைப் பண்ணை மூலம் செயல்படுத்தப்படுகிறது.

நெடும்பலம் அரசு விதைப்பண்ணை 63.73 ஏக்கரில் அமைந்துள்ளது. அதில் 54.43 ஏக்கரில் 3 போகமும் (குறுவை, சம்பா, கோடை) விதை உற்பத்தி பணியானது மேற்கொள்ளப்படுகிறது. மேலும், நெல், பயறு வகைகள் (உளுந்து, பச்சைப்பயறு) மற்றும் பசுந்தாள் உரப் பயிா்கள் (சணப்பை, தக்கைப்பூண்டு) போன்ற பயிா்களின் விதையானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இதர ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து பெறப்பட்டு, ஆதார நிலை 1 விதைகள் உற்பத்தி செய்து, இங்குள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, உரிய பகுப்பாய்வு பிறகு சான்று பெற்ற விதைகளாக மாவட்டத்திலுள்ள 10 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வட்டாட்சியா் பரமேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குநா் தங்கபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக திருத்துறைப்பூண்டியில் உள்ள உப்பு சத்தியாகிரக யாத்திரையில் பங்கேற்ற ராமச்சந்திர நாயுடு இல்லத்திற்கு சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.