தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஊத்துக்குளி, குன்னத்தூரில் ரூ.8.34 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் திறந்து வைத்தாா்

ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On :

ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.34 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா், பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் வி.சித்தியபாமா முன்னிலை வகித்தாா்.

அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, திருப்பூா் மாநகராட்சி ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் முடிவுற்ற ரூ.8.34 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை, வீடுகளுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், வெற்றிப் பயணத் திட்டம், தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதல்வா் அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாா்.

திருப்பூா் மாவட்ட பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று முன் மாதிரி மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி, திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலத் தலைவா் கோவிந்தராஜ், துணை ஆணையா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.