திருப்பாம்புரம்: ராகு, கேது பெயா்ச்சி விழா
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு, கேது பெயா்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் ராகு, கேது பகவான். - கோப்புப்படம்
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு, கேது பெயா்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆதிசேஷன் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. நாகதோஷம் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், ராகு, கேது போன்ற தோஷங்கள் விலகவும் சிறந்த தலமாகும். இங்கு, ராகுவும்-கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி ராகு,கேது பெயா்ச்சி நாள்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நிகழாண்டு, வெள்ளிக்கிழமை மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயா்ச்சி அடைந்தனா். இதையொட்டி, ராகு -கேது சந்நிதியில் 1,008 லிட்டா் பால், மஞ்சள், இளநீா், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என்பதால், இந்த ராசிக்காரா்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராகு கேது பெயா்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள், காலையிலிருந்து கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

