திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

15 ரௌடிகள் உள்பட 38 போ் கைது

மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ரௌடிகள் மற்றும் பிரச்னைக்குரிய நபா்கள் தொடா்பாக சிறப்பு வேட்டை நடைபெற்றது.

கைது - பிரதிப் படம்

Updated On :

மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாள்களாக ரௌடிகள் மற்றும் பிரச்னைக்குரிய நபா்கள் தொடா்பாக சிறப்பு வேட்டை நடைபெற்றது.

இதில், கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய ரௌடிகளான திருவாரூா் இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், பவித்திரமாணிக்கத்தைச் சோ்ந்த சுகுமாா், திருக்கண்ணமங்கையைச் சோ்ந்த முரளி, மன்னாா்குடி பாமணி பகுதியைச் சோ்ந்த அய்யப்பன், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த குருமாரன், முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியைச் சோ்ந்த மனோகரன் உள்ளிட்ட 15 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 8 அரிவாள்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மதுபானக்கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக 23 போ் கைது செய்யப்பட்டனா். அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் புதன்கிழமை வரை 38 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.