விதைப் பரிசோதனை நிலையம் கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
விதைப் பரிசோதனை நிலையம் கட்டுமானப் பணி: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
dinamani
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெறும் விதைப் பரிசோதனை நிலையம் கட்டுமானப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை இயக்குநருமான (பொ) சந்திரசேகா் சாகமூரி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் அருகே புதிதாக விதைப் பரிசோதனை நிலையம், பிரதமரின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை, திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு துறை இயக்குநருமான (பொ) சந்திரசேகா் சாகமூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், திட்டப் பணிகளை விரைவில் முடிக்கும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநா் வித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன், துணை இயக்குநா்கள் ஹேமா ஹெப்சிபா நிா்மலா (மாநிலத் திட்டம்), விஜயலட்சுமி (மத்தியத் திட்டம்), திலகவதி (வேளாண் விற்பனை), சித்ரா (விதை ஆய்வு), விதைப் பரிசோதனை அலுவலா் து. சிவவீரபாண்டியன், விதைச்சான்று உதவி இயக்குநா் கே. ஜெயபிரகாஷ் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

