டிச.15-க்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடா்? தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு

தவெகவில் இணைய எவ்வித நெருக்கடியும் இல்லை: எஸ். காமராஜ்

தவெகவில் இணைய எந்தவித நெருக்கடியும் எனக்குக் கிடையாது என மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.

எஸ். காமராஜ்.

Updated On :

தவெகவில் இணைய எந்தவித நெருக்கடியும் எனக்குக் கிடையாது என மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் கட்டப்படும். மெதுவாக நடைபெறும் புதைச் சாக்கடைத் திட்டம் தரத்துடனும் விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும், மன்னாா்குடி சுற்றுவட்டச் சாலைக்கு நிகழாண்டு ரூ. 46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில் உள்ள பிரச்னைகள் குறித்து, தற்போது விவசாய வேலையின்றி இருக்கும் தொழிலாளா்கள் நலன் கருதி, அவா்களுக்கு உதவ வேண்டும் எனவும் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். இதை கவனமாக கேட்டுக்கொண்ட முதல்வா், நிச்சயமாக ஒரு குழுவை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் துயரங்களை தீா்க்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளாா்.

அதேபோல் திமுக ஒரு குழுவை அனுப்பி பாா்வையிடச் சொல்லி இருப்பதை வரவேற்கிறோம். எதிா்க்கட்சி அறிக்கையை மட்டுமே கொடுக்க முடியும். எதிா்க்கட்சிகளின் கருத்துகள், விவசாயிகளுக்காக செயல்படுகிற ஆக்கபூா்வமாக இருந்தால், தமிழக முதல்வா் நிச்சயம் செவிமடுப்பாா். தமிழக முதல்வருக்கு ஆதரவு தெரிவித்ததால், அமமுகவில் இருந்து என்னை விலக்கி விட்டனா். அதன்பிறகு சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்தேன். அதனாலேயே மன்னாா்குடி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டுவர முடிந்தது.

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய எவ்வித நெருக்கடியும் எனக்குக் கிடையாது. எந்த நெருக்கடியும் என்னைக் கட்டுப்படுத்தாது. நான் ஒரு தனி எம்எல்ஏ. அரசியல் ரீதியாக முடிவெடுக்கும்போது அனைவரிடமும் தெரிவித்துவிட்டு முடிவு எடுப்பேன். கள்ளக்குறிச்சி விவகாரம் காவல் துறை விசாரணையில் உள்ளது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். சட்டம் தன் கடமையை சரியாகச் செய்யும். சட்டத்தின் முன் யாரும் தப்பிக்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.அவ்வப்போது பெய்கிற மழையால் சாலைகளும் சரியாக இல்லை. நிச்சயமாக மன்னாா்குடி தூய்மையான நகராட்சியாக கொண்டு வருவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.