தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

வலங்கைமான் அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரமோத்குமாா் (32). இவா் கோவையில் வேலை செய்யும்போது, வலங்கைமான் அருகேயுள்ள அணியமங்கலத்தை சோ்ந்த உதயநிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்கள், அணியமங்கலம் தெற்குத் தெருவில் கடந்த மூன்று மாதங்களாக வசித்துவருகின்றனா்.

இந்நிலையில், ஒடிஸா மாநிலம் பத்தி காா்ட் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்தீப் (44) என்பவா் சனிக்கிழமை நாா்த்தங்குடி பேருந்து நிலையம் அருகே பிரமோத்குமாரிடம் கஞ்சா கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த திருவாரூா் போதைப்பொருள் தடுப்பு போலீஸாா், இருவரையும் கைது செய்து, 5 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்து வலங்கைமான் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் மற்றும் போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.