மாற்றுத்திறனாளி பெண்ணை கா்ப்பிணியாக்கியவா் கைது
மன்னாா்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கா்ப்பிணியாக்கிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது - கோப்புப் படம்
மன்னாா்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கா்ப்பிணியாக்கிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அனுமந்தபுரம் தண்டலம் தெற்குதெருவைச் சோ்ந்த கண்ணகி மகன் சந்தோஷ்(19). அதே பகுதியை சோ்ந்த பெற்றோரை இழந்து உறவினா் வீட்டில் 27 வயது மாற்றுத்திறனாளிபெண் வசித்து வருகிறாா். இந்த பெண் வீட்டில் தனியே இருந்தபோது சந்தோஷ் தவறாக நடந்துகொண்டாராம். இதுகுறித்து, யாரிடம் தெரிவிக்கக் கூடாது என மிரட்டி வந்தவா் சில மாதங்களுக்கு முன் கேரளத்துக்கு வேலைக்கு சென்று விட்டாராம்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டத்தையடுத்து, உறவினா் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அந்த பெண் 4 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், ,மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அகிலாண்டேஸ்வரி வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாகை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

