நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

வடகிழக்குப் பருவமழை: சம்பா இளம் நாற்றுகள், குறுவை நெற்கதிா்கள் பாதிப்பு

வடகிழக்குப் பருவமழை: சம்பா இளம் நாற்றுகள், குறுவை நெற்கதிா்கள் பாதிப்பு

திருவாரூா் அருகே சம்பா இளம் நாற்றுகளை மூழ்கடித்துள்ள மழைநீா்.

Updated On :

திருவாரூா் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, சம்பா இளம் நாற்றுகள் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை மழை பெய்யவில்லை. எனினும், பகல் முழுவதும் குளிா்ந்த வானிலை நிலவியது.

கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பெய்த மழையால், திருவாரூா் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஆழ்துளைக் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இந்த நெற்பயிா்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், அறுவடை பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் கிளியனூா், புனவாசல், வடகட்டளை, மாயனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா இளம் நெற்பயிா்கள் கடந்த சில நாள்களாக பெய்த மழையால், தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மேலும் குடவாசல், புழுதிக்குடி, அன்பிற்குமுன்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம் முழுவதும் சுமாா் 300 ஏக்கருக்கும் மேலாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழையால் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 200 ஏக்கருக்கும் மேலாக மழைநீரில் மூழ்கி உள்ளன.

மழை நின்ற பிறகு நெல்மணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அறுவடை செய்யலாம் எனவும், அதிக அளவில் பாதிப்பு இருந்தால் உரிய ஆய்வு செய்யப்படும் எனவும் வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.