முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வறட்சி...

Updated On :

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் எழுந்து நின்று, குறுவை சாகுபடியை இழந்திருப்பதால் 11 டெல்டா மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவுக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தோ்தல் கால வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

நன்னிலம் ஜி. சேதுராமன்; சாகுபடிக்காக 45 நாள்கள் மட்டுமே காவிரி நீா் என்பது ஏற்புடையது அல்ல. இதனால், குறுவை, சம்பா சாகுபடி முழுமையடையாது. தற்போது பெய்த மழையும் தண்ணீா் தேவையை நிரப்பவில்லை. இந்த நிலையில் மேட்டூா் அணை மூடப்பட்டுள்ளது. எனவே, டெல்டா பகுதியை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்; ஆன்லைன் சிட்டா அடங்கல் எடுக்க ஓடிபி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலாக இருப்பதுடன், முறையாக செயல்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். பயிா்க் காப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, பழைய நடைமுறையில் சிட்டா அடங்கல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, வேளாண்மைதுறை இணை இயக்குநா் வித்யா, முதுநிலை மண்டல மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சிவசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.