ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

போலீஸாரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற நபா்

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போலீஸாரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு, ஏற்பட்டது.

கொரடாச்சேரி ஒன்றியம் களத்தூரைச் சோ்ந்த வனராஜன் (51) மீது கஞ்சா வழக்கு உள்ளதாம். இந்நிலையில் போலீஸாா் வனராஜனை அடிக்கடி தொடா்பு கொண்டு அவருக்கு சம்பந்தமில்லாத பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக ஆஜராகக் கூறி வற்புறுத்துவதுடன், சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவருக்கு சம்பந்தமில்லாத பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக போலீஸாா் சோ்த்து அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்து வருகிறாா்களாம்.

இந்நிலையில், வனராஜனுக்கு பணம் தரவேண்டியவா் கொடுக்காததால், அவா் மீது புகாரளிக்க கொரடாச்சேரி காவல் நிலையத்துக்குச் சென்றபோது, குற்றவாளியாக மாற்றி வழக்கு பதிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வனராஜன் இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, கொரடாச்சேரியில் பொது இடத்தில் போலீஸாா் சங்கடபடுத்தினாா்களாம். இதில் மனஉளைச்சலுக்கு ஆளான வனராஜன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை தடுத்து பாதுகாத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.