ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தில்லியில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி

தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :

தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

தில்லியில் நிகழாண்டு ஜனவரி முதல் கடந்த 12ஆம் தேதி வரை மொத்தம் 1872 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்குவால் பாதிக்கப்பட்டு, ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை அனிஷ்கா கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தது. அதேபோல, ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுர்ஜீத் சிங் (52) என்பவரும் உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் டெங்குவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதே ஆண்டு செப்.12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 ஆகும். இதே காலக்கட்டத்தில், கடந்த 2013ஆம் ஆண்டில் 466 பேரும், 2012ஆண் ஆண்டில் 19 பேரும், 2011ஆம் ஆண்டில் 131 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டில் டெங்குவுக்கு 3 பேர் பலியாகினர். மொத்தம் 1000 பேர் பாதிக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் உத்தரவு

தில்லியில் டெங்கு நோய் சிகிச்கைக்கு வரும் நோயாளிகளுக்காக படுக்கை வசதிகளை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.

தில்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நட்டா தமது அமைச்சகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பின்னர், இதுகுறித்து தமது சுட்டுரையில் நட்டா செய்துள்ள பதிவு: தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோய் சிகிச்சை பெற வருவோருக்காக படுக்கை வசதிகளை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொண்டேன். மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என கூறியுள்ளார்.

அறிக்கை சமர்பிப்பு: முன்னதாக, தில்லியில் ஏழு வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத விரக்தியில் அச்சிறுவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நட்டா உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, தில்லியில் தமது அலுவலகத்தில் மேற்கண்ட கூட்டத்தை நட்டா திங்கள்கிழமை கூட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.