ஆர்.கே.புரம் ஐயப்பன் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
தில்லி ராமகிருஷ்ணாபுரம் (ஆர்.கே.புரம்) ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
தில்லி ராமகிருஷ்ணாபுரம் (ஆர்.கே.புரம்) ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
தில்லி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் குழுவினர், புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் தில்லியில் உள்ள முக்கியக் கோயில்களில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடத்தி வருகின்றனர்.
முதல் சனிக்கிழமையன்று தில்லி வைகுண்டநாதர் கோயிலில் பாராயணம் நடைபெற்றது. இரண்டாவது சனிக்கிழமை ராமகிருஷ்ணாபுரம் ஐயப்பன் கோயிலில் பாராயணம் நடைபெற்றது. இதில், சதானந்த சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தின் மகிமை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தில்லி தமிழ் சங்கத்தின் தலைவர் வி. பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், இணைச் செயலாளர்கள் சத்யா அசோகன், பி.குருமூர்த்தி, கர்நாடக சங்கீத சபா செயலர் ஆர். மகாதேவன், ரசிகப்ரியா செயலர் ராமநாதன், விஷ்ணு சகஸ்ரநாமக் குழுவைச் சேர்ந்த பாலாஜி, வைத்தியலிங்கம், ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தில்லி முத்தமிழ் பேரவையின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், துணைத் தலைவர் பெ. ராகவன் நாயுடு, தில்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் என். கண்ணன் ஆகியோர் செய்திருந்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

