இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

காவலாளி அடித்துக் கொலை

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் வயது முதிர்ந்த காவலர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் வயது முதிர்ந்த காவலர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

கால்காஜி பகுதியில் கட்டுமானம் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்திற்கு காவலராக நான்ஹே (60) இருந்து வந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நான்ஹே உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சஞ்சீவ் ராணா என்ற நபர், சுத்தியலால் நான்ஹேவைத் தாக்கிக் கொலை செய்தார். இதைக் கண்ட அங்கிருந்த நபர்கள், சஞ்சீவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கட்டுமானம் நடைபெறும் கட்டடத்தில் தங்கியிருக்க நான்ஹே, தனக்கு அனுமதி மறுத்ததால் அவரைக் கொலை செய்ததாக விசாரணையின்போது சஞ்சீவ் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.