ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நிர்மாண் பவனில் திடீர் தீ விபத்து

தில்லி நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:35 pm

DIN

தில்லி நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் வியாழக்கிழமை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:  நிர்மாண் பவனில் உள்ள இரண்டாவது தளத்தில் தீவிபத்து நிகழ்ந்ததாக காலை 10.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
சுமார்  15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.  கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள 250-ஆவது எண்அறையில் இந்த விபத்து நிகழ்ந்தது.  
இந்த விபத்தில் அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டி,  இருக்கைகள் சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர். நிர்மாண் பவனில்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.