பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்டவர் கைது
உத்தர பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தேடப்பட்டவரை போலீஸார் தில்லியில் திங்கள்கிழமை கைது செய்தனர்.


உத்தர பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தேடப்பட்டவரை போலீஸார் தில்லியில் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் தன்வீர். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 2017, அக்டோபர் 23-ஆம் தேதி தன்வீர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிழக்கு தில்லி ஷீலாம்பூர் பகுதியில் இரண்டு மணி நேரத்தில் இருவரை அடுத்தடுத்து கொலை செய்தார். இவர், உத்தர பிரதேசத்தின் "சைனு' சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர். வேறு வழக்குகளில் இவரைப் பிடிக்க ஏற்கெனவே போலீஸார் முயற்சி மேற்கொண்ட போது, புல் பிரஹலாத்பூர் பகுதியில் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவானார்.
இந்நிலையில், காரில் தில்லி ஓக்லா மண்டி பகுதிக்கு தன்வீர் தனது கூட்டாளியுடன் வருவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஓக்லா மண்டியின் வெளிப்புறப் பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வெள்ளை நிறக் கார் வேகமாக வந்தது. அக்காரை நிறுத்த போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். அப்போது, காரை ஓட்டி வந்த தன்வீர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதற்காக அங்கிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு வேகமாக காரை செலுத்தினார். மேலும், போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டார்.
ஆனால், குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்ததால் போலீஸாருக்கு காயம் ஏற்படவில்லை. அதேவேளையில், தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் போலீஸார் திருப்பிச் சுட்டனர். இதைத் தொடர்ந்து, தன்வீர் கைது செய்யப்பட்டார்.
அவரது கூட்டாளிகள் மட்டும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தன்வீரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை வழக்கிலும் தன்வீர் தேடப்பட்டு வந்தார். இவரைப் பற்றிய துப்புக் கொடுப்போருக்கு ரூ.70 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தில்லியில் தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...