தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

செல்லிடப்பேசிகளுக்கான 10 இலக்க எண்ணில் மாற்றம் இல்லை

செல்லிடப்பேசிகளுக்கான சிம் கார்டு எண் 10 இலக்கத்திலேயே தொடரும். சிம் கார்டை பயன்படுத்தி கார், கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட கருவிகளை

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:52 am

DIN

செல்லிடப்பேசிகளுக்கான சிம் கார்டு எண் 10 இலக்கத்திலேயே தொடரும். சிம் கார்டை பயன்படுத்தி கார், கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட கருவிகளை இயக்குவதற்கு மட்டுமே 13 இலக்க எண் பயன்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செல்லிடப்பேசிகளுக்கான எண் 13 இலக்கமாக மாற்றப்படுகிறது என்று தகவல் வெளியானது. ஆனால், இந்த 13 இலக்க எண் செல்லிடப்பேசிகளுக்கானது அல்ல என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிம் கார்டுகளைப் பயன்படுத்தி கண்காணிப்பு கேமரா, கார், இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு மீட்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை இயக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இப்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பயன்பாட்டுக்காகவே, அதாவது சிம் கார்டை பயன்படுத்தி சாதனங்களுக்கு இடையே (எம்-டூ-எம்) தொடர்பை ஏற்படுத்துவதற்கு மட்டுமே 13 இலக்க எண் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சாதனங்களை விற்பனை செய்பவர்களுக்கு அண்மையில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், எம்-டூ-எம் பயன்பாட்டுக்கான சிம் கார்டுகளுக்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 13 இலக்கம் வழங்கப்படும். இப்போது 10 இலக்கத்தில் செயல்படும் எம்-டூ-எம் சிம் கார்டுகள், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 13 இலக்கத்துக்கு மாற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுவே, பொதுமக்கள் செல்லிடப்பேசியில் பேசுவதற்காக பயன்படுத்தும் சிம் கார்டுக்கும் 13 இலக்க எண் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவக் காரணமாக அமைந்துவிட்டது. செல்லிடப்பேசிக்கான சிம் கார்டு தொடர்ந்து 10 இலக்கத்திலேயே செயல்படும் என்பதை பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரை தளத்திலும் பதிவிட்டுள்ளது.


தில்லி தலைமைச் செயலருக்கு 
உதடு, காது பகுதிகளில் காயம்: மருத்துவ அறிக்கையில் தகவல்
புது தில்லி, பிப். 21:  தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷுக்கு உதடு, காது பகுதிகளில் காயங்கள் உள்ளதாக மருத்துவ பரிசோதனை ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரால் தாக்கப்பட்டதாக தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தில்லி போலீஸில் செவ்வாயக்கிழமை புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த  தாக்குதல் சம்பவம் தொடர்பாக தில்லி அருணா அசஃப் அலி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அன்ஷு பிகாஷின் இரு காது, கன்னம் எலும்பு ஆகிய பகுதிகளில் வீக்கம் காணப்பட்டது. அவரது கீழ் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இது சட்டப்படி நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை விவரங்களாகும். தில்லி போலீஸார் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.