விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லி தலைமைச் செயலகம் அருகே  மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: பொது விநியோக முறையை பலப்படுத்தக் கோரிக்கை

தலைநகர் தில்லியில் பொது விநியோக முறையை பலப்படுத்தக் கோரி தலைமைச் செயலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:30 pm

DIN

தலைநகர் தில்லியில் பொது விநியோக முறையை பலப்படுத்தக் கோரி தலைமைச் செயலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசுகையில், "பொது விநியோக முறையில் அளிக்கப்படும் ரேஷன் பொருள்களை நம்பித்தான் உழைக்கும் மக்கள் உள்ளனர். 
ஆனால், பொது விநியோகத் திட்டத்தை கேஜரிவால் அரசு செம்மையாகஅமல்படுத்த இயலவில்லை. இதை அமல்படுத்துவதில் பாஜக ஆளும் மாநிலங்களைவிட தில்லி அரசு பின்தங்கியுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
பொது விநியோக முறையை பலப்படுத்த அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டையை தில்லி அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 
கட்சியின் தில்லி செயலாளர் கே.எம். திவாரி பேசுகையில், "சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனு தில்லி முதல்வர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.