வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஹோலி பண்டிகை: தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை வெள்ளிக்கிழமை (மார்ச் 2) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தில்லியில் ஹோலி கொண்டாடட்டத்தின்

News image
Updated On :1 மார்ச் 2018, 8:59 pm

DIN

வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை வெள்ளிக்கிழமை (மார்ச் 2) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தில்லியில் ஹோலி கொண்டாடட்டத்தின் போது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வாகன ஓட்டிகளின் விதி மீறல்களைத் தடுக்கவும் போதிய போலீஸாரை பணியில் ஈடுபடுத்த தில்லி காவல் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) கரிமா பட்னாகர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
ஹோலி பண்டிகையன்று மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதைத் தடுக்கவும், இரு சக்கர சாகச பயணத்தை நிறுத்தவும், வாகனப் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
முக்கியச் சாலைச் சந்திப்புகளில் போதையைக் கண்டறியும் வகையிலான கருவிகளுடன்கூடிய சிறப்பு சோதனை குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. சிறார்கள் சாகச பயணம் மேற்கொள்வது, கார் ஓட்டுவது போன்றவை சோதனையின் போது கண்டறியப்பட்டால் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களைக் கண்காணித்து தடுக்கும் வகையிலும், அதீத வாகனத்தில் வாகனம் ஓட்டுவோரைக் கண்காணிப்பதற்காவும் தில்லி முழுவதும் முக்கியமான இடங்களில் உள்ளூர் போலீஸாரும், காவல் கட்டுப்பாட்டு வாகனப் போலீஸாரும், போக்குவரத்துக் காவல் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் உத்தரவின்பேரில், சிவப்பு விளக்கை தாண்டுவது, வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது செல்லிடப்பேசியில் பேசுவது, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது, அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது ஆகிய குற்றங்களுக்காக வாகன ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பட்னாகர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.