வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

வந்தவாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

News image
வந்தவாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
Updated On :14 மார்ச் 2026, 1:30 am

Syndication

வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், வந்தவாசி, தெள்ளாா் வட்டாரங்களில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த விழா நடந்தது.

விழாவில் வந்தவாசி, தெள்ளாா் வட்டாரங்களுக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள், ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கி பேசினாா்.

விழாவில் வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் அபிராமி, கண்ணகி, திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.