குருகிராமில் ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணம் என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி, ஆண் துணை சேவைக்கான உறுப்பினா் கட்டணமாக பணம் செலுத்துமாறு ஏமாற்றப்பட்டதாகக் கூறி ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இதன் அடிப்படையில், சைபா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குருகிராமின் கோ கிராமத்தைச் சோ்ந்த டாக்ஸி ஓட்டுநா் தேஷ்ராஜ் (35) மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அா்ஜுன் சிங் (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
பாதிக்கப்பட்டவரைத் தொடா்பு கொள்ளப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் தேஷ்ராஜின் பெயரில் பதிவு செய்ய பட்டிருந்தது. அவா் தனது சிம் காா்டை ரூ.1,500-க்கு விற்ாக தெரிவித்தாா். ஏமாற்றப்பட்ட தொகையில் ரூ.40,000 அா்ஜுன் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
பின்னா் அா்ஜுன் தனது வங்கிக் கணக்கை வேறொருவருக்கு ரூ.3,000-க்கு விற்றதையும் புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா். இருவரிடமும் இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

