தில்லி ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதிதாக 3 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது:
2019 மக்களவைத் தேர்தல், 2020 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ஆம் ஆத்மியினர் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தில்லி பல்கலைக்கழகங்களில் உள்ள கல்லூரிகளை இணைக்கும் வகையில், தில்லி ஆசிரியர் சங்கம், தில்லி ஆசிரியர்கள் அல்லாப் பணியாளர்கள் சங்கம், தில்லி ஆராய்ச்சியாளர் சங்கம் ஆகிய 3 சங்கங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சங்கங்களில் தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஆராச்சியாளர்கள் இடம் பெறுகின்றனர் என்றார் அவர். அதற்கான நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள்: தில்லி ஆசிரியர் சங்கத்துக்கு தலைவராக பிரதீப் குமார் சிங் (அம்பேத்கர் கல்லூரி), பொதுச் செயலராக நாகேந்திர குமார் (பார்தி கல்லூரி) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தில்லி ஆசிரியர்கள் அல்லாப் பணியாளர்கள் சங்கத்துக்கு தலைவராக கேதார்நாத் (தில்லி பல்கலைக்கழகம்), பொதுச் செயலராக அமர்தீப் காஷ்யப் (தில்லி பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, தில்லி ஆராய்ச்சியாளர்கள் சங்கத்துக்கு தலைவராக மனோஜ் குமார் குப்தா (தில்லி பல்கலைக்கழகம்), பொதுச் செயலராக சுஜித் குமார் யாதவ் (தில்லி பல்கலைக்கழகம்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


