ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தொழில்நுட்ப கோளாறு: மெட்ரோ சேவை பாதிப்பு

தில்லி மெட்ரோ புளூ லைன் வழித்தடத்தில் வியாழக்கிழமை மதியம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை சுமார் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Updated On :29 மார்ச் 2018, 7:22 pm

தில்லி மெட்ரோ புளூ லைன் வழித்தடத்தில் வியாழக்கிழமை மதியம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவை சுமார் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மிகவும் நெரிசல் மிகுந்த வழித்தடமான புளூ லைன் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுதொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "புளூ லைன் வழித்தடத்தில் உள்ள கரோல் பாக் - ஆஷ்ரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மின் கம்பிகளில் வியாழக்கிழமை மதியம் 2.05 மணிக்கு திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 50 கி.மீ. தூர வழித்தடத்தில் உள்ள ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மாலை 3.35 மணிக்கு இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன' என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.