பணம் பறிப்பு: இளைஞர் கைது
By DIN | Published On : 01st April 2019 07:40 AM | Last Updated : 01st April 2019 07:40 AM | அ+அ அ- |

மேற்கு தில்லி, ரகுபிர் நகரில் கும்பல் தலைவர் சதாம் கெளரியின் பெயரில் பணம் பறித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் கூறியதாவது:
மேற்கு தில்லி, ரகுபிர் நகர் பகுதியில் பிரதீப் சர்மா (27) மற்றும் அவரது கூட்டாளி போலா ஆகிய இருவரும், கும்பல் தலைவர் சதாமின் பெயரைக் கூறி பணம் பறித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களைப் பிடிக்கத் தனிப் படை அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரகுபிர் நகர் எல் பிளாக் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது ரகுபிர் நகர் சப்ஜி மண்டி அருகே பிரதீப் சர்மா சிக்கினார். ஹரி நகரைச் சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவரிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டாளி போலாவை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.